விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்? – செங்கோட்டையன் சொன்னது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல வேண்டும் என கருத்து பரிமாறி உள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தான் முடிவுகளை மேற்கொள்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 25) கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கணவரை போரில் கொன்று விட்டார்கள் என்று சொன்னவுடன் கணவர் ரத்தத்தை நெற்றியில் இட்டு கோட்டையில் இருந்து திண்டுக்கல் வரை நடந்து வந்து திப்பு சுல்தான் படைகளை எடுத்துச் சென்று வெள்ளையனை விரட்டிய பெருமை வேலுநாச்சியாருக்கு உண்டு

ADVERTISEMENT

வேலுநாச்சி படையில் உறுதியாக இருந்த குயிலி ஆயுதக் கிடங்கில் குதித்து ஆங்கிலேயரின் ஆயுதங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி தனது உயிரை தியாகம் செய்தார் என்றார்.

மேலும் எம்ஜிஆர் கழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட நேரத்தில் இதே நிலைதான் அன்றும் உருவானது. அதே போல் தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் 2. அந்த கட்சிகள்தான் இருக்க வேண்டுமா? புதிய வரலாறு படைக்க ஒரு தலைவர் தேவை என மக்கள் மட்டும் இல்லை, இளைஞர்கள் மனதிலும் நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

ஆகவே புதிய வரலாற்றை படைக்க ஒரு புதிய தமிழகத்தை உருவாக்க தலைவர் சொன்ன பணிகளை மேற்கொள்கிறோம். விஜய் மக்கள் சக்தியோடு ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்றார்.

மேலும் வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை 97லட்சத்து 37ஆயிரத்து 812 பேர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் உண்மையான வாக்காளர்கள் யார் என்பது குறித்து கவனம் செலுத்த இருக்கிறோம் என்றார்.

ADVERTISEMENT

ஓபிஎஸ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவது குறித்து கேள்விக்கு, ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல வேண்டும் என கருத்து பரிமாறப்பட்டிருக்கிறது இதனால் ஓபிஎஸ் தான் முடிவுகளை மேற்கொள்வார்.

கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்று பணி செய்ய இருக்கிறோம் என்றார்.

ஒவ்வொரு இயக்கத்தைச் சார்ந்தவர்களோடும் நட்பின் அடிப்படையில் கலந்து பேசுவது வழக்கம். ஆனால் தேர்தல் கூட்டணி என்பது எதிர்காலத்தில் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றவர், அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள். அவர்கள் மிக விரைவில் வந்து விடுவார்கள் என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share