ஆடு, ஓநாய் குறித்த ஈபிஎஸ் கருத்து : செங்கோட்டையன் பேட்டி!

Published On:

| By Kavi

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடி வருகின்றனர். sengottaiyan reply to edappadi palaniswami

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே செங்கோட்டையன் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாதது அரசியலில் பேசு பொருளானது.

ஆனால் அவர் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. அதில் அனைத்திலும் கலந்துகொள்ள இருக்கிறேன்.

நினைவு நாள் என்றால் எல்லோரும் அங்கு செல்ல வேண்டும். பிறந்தநாள் என்கிற போது அதை இங்கேயே மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். மக்களை ஊக்கப்படுத்துவதற்கு, கட்சியை உற்சாகப்படுத்துவதற்கு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என கூறினார்.

தொடர்ந்து அவரிடம் ஓநாயும் வெள்ளாடும்  ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என்று எடப்பாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்… நான் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. sengottaiyan reply to edappadi palaniswami

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share