சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். Sengottaiyan left behind OPS
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிட்டு கோஷம் எழுப்பினர்.
ஒருபக்கம் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘ஏங்க நீங்க முதலமைச்சரா இருந்தவர்… உட்காருங்க… உங்கள் ஆட்சியில் 2017ல் நடந்த தீர்ப்பை சொல்லியாச்சு உட்காருங்க’ என்று கூறினார்.
எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கேட் நம்பர் 4 வழியாக பேரவைக்குள் இருந்து வெளியே சென்றனர்.
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் கேட் நம்பர் 4 வழியாக செல்லவில்லை. முன்னாள் முதல்வரும் போடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் போர்டிகோ அருகே இருக்கும் கேட் வழியாக வெளியேறினார்.
ஓபிஎஸ் சென்ற வழியில் செங்கோட்டையனும் வெளியேறினார்.
செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் மனக்கசப்புடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஓபிஎஸ் பின்னால் வெளியேறியது கவனிக்கத்தக்கது. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இவர்களைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். Sengottaiyan left behind OPS