மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உடனான ரகசிய சந்திப்பை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்துள்ளார். Sengottaiyan explains about meeting Amit Shah
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், செங்கோட்டையன் கருத்து வேறுபாட்டில் இருந்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி வந்த நிலையில், செங்கோட்டையனும் டெல்லி சென்று வந்தார்.
தலைநகர் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் தான், அவர் டெல்லி சென்று வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் டெல்லி சென்று வந்தது தொடர்பாக செங்கோட்டையன் இன்று (ஏப்ரல் 7) தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று கூறியுள்ளார்
தொடர்ந்து டெல்லியில் அமித்ஷாவையும், சென்னையில் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததை உறுதி செய்த அவர், “அதிமுகவின் நலனுக்காகவே அமித்ஷாவை சந்தித்தேன். நிர்மலா சீதாராமனை ஜிஎஸ்டி வரி விவகாரம் தொடர்பாக சந்தித்தேன்” என்று கூறினார்.
பாஜக அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, இத்தகைய விஷயத்தில் முடிவெடுப்பது தலைமை தான் என்றும் பதிலளித்துள்ளார்.
நீங்கள் அமித்ஷாவை சந்திக்கப் போவது எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே தெரியுமா என்று கேள்வி எழுப்பியதற்கு, எனது சகாக்களும் மத்திய அமைச்சர்களை சந்தித்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். Sengottaiyan explains about meeting Amit Shah