எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி ஆலோசனை… செங்கோட்டையன் மீண்டும் புறக்கணிப்பு!

Published On:

| By vanangamudi

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மீண்டும் (மார்ச் 17) புறக்கணித்தார். Sengottaiyan boycott Edappadi Meeting

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னதாக பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

எம்ஏல்ஏ-க்கள் மீட்டிங் முடிந்தபிறகு சட்டமன்றத்திற்குள் எடப்பாடி சென்றபோது அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி உடன் சென்றார். அவரிடம் “தம்பி… அந்த பேப்பரை சரியா இன்னொரு முறை படிச்சுக்க. உடனே நான் வெளியே வந்திருவேன்” என்று வெளிநடப்பு செய்வது குறித்து ஆலோசனை செய்தபடியே சென்றார் எடப்பாடி பழனிசாமி. Sengottaiyan boycott Edappadi Meeting

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share