கிச்சன் கீர்த்தனா: செங்கோட்டை பார்டர் பரோட்டா

Published On:

| By Minnambalam

பரோட்டாவுக்கு மயங்காதோர் உண்டோ? விருதுநகர் எண்ணெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து, வெஜ் கொத்து என பரோட்டா வகைகளை அடுக்கிட்டே போகலாம்.

ஆனால் இந்த பரோட்டாவுக்கு ஃபேமஸ் ஆன இடம் செங்கோட்டை பார்டர் பரோட்டாதான். இந்த பார்டர் பரோட்டாவை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

ADVERTISEMENT

என்ன தேவை?

மைதா – அரை கிலோ
முட்டை – ஒன்றில் பாதி
எண்ணெய் – 50 கிராம்
வனஸ்பதி – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

வனஸ்பதியை மிதமான சூட்டில் உருக்கிக் கொள்ளவும். மைதா மாவை முட்டை, உப்பு, சிறிது தண்ணீர், உருக்கிய வனஸ்பதியை சிறிது சிறிதாகச் சேர்த்து சற்று நெகிழ்வாகப் பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

ADVERTISEMENT

ஊறியதும் எண்ணெய் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்து அரை மணி நேரம் மீண்டும் ஊற வைக்கவும். பிறகு சப்பாத்தி போல் தேய்த்து நன்றாக வீசி, சுருள் வட்டமாக செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் நிறைய எண்ணெய் ஊற்றி, பரோட்டாவை சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

திருநெல்வேலி மட்டன் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: தஞ்சாவூர் மட்டன் குழம்பு

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share