நா.மணி Sempuzuthi Pathayil book Review
வெ. ஜீவகிரதனின் “செம்புழுதிப் பாதையில்” நூல் திறனாய்வு!
சட்டக் கல்லூரியில் படிப்பு. இறுதியாண்டு தேர்வை மட்டும் எழுத வேண்டும். இன்னும் ஆறே ஆறு மாதங்கள் பாக்கி. இந்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நக்சல்பாரி இயக்கம் எனப்படும் ஓர் புரட்சிகர அரசியல் இயக்கத்தில் முழு நேர ஊழியராக செல்லும் முடிவை எடுக்கிறார் ஓர் இளைஞர். Sempuzuthi Pathayil book Review
அப்போது தான் அழித்தொழிப்பு பாதையிலிருந்து விலகி, மக்களை அரசியல் படுத்தி, அதிகாரப்படுத்தும் முடிவை எடுத்திருந்தது நக்சல்பாரி இயக்கம். இவ்வியக்கத்தின் முழு நேர ஊழியராக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் நூலாசிரியர். இவரது இரண்டு ஆண்டு வாழ்க்கை பயணக் கதையே “செம்புழுதிப் பாதையில்” என்ற நூல்.
அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என படபடக்கும் மனதோடு படிக்க தூண்டுகிற நூல். ஆனால் துப்பறியும் கதைகளோடு ஒப்பிட முடியாது. ஒரு ஆக்சன் படம் போல் நகருகிறது அவரது எழுத்து நடையும் அதன் யதார்த்தமும். Sempuzuthi Pathayil book Review
இளைஞர்கள் புரட்சிகர பாதையை ஏன் தேர்வு செய்கிறார்கள்? என்பதற்கு சிறந்த சாட்சியம் வெ.ஜீவகிரிதரனின் இந்த நூல். சமூகத்தில் தான் கண்ட, அனுபவித்த சமூக அவலமும், அநீதியும் அப்படி ஒரு பாதையை தேர்வு செய்ய காரணியாக அமைகிறது.

உழைக்கும் மக்களுக்காக எண்ணற்ற பாடுகளை எளிதாகப் பட முடிகிறது. எவ்வளவு பெரிய கஷ்டங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் பணியாற்ற முடிகிறது. கரடு முரடான பாதைகளை எளிதாக கடந்து செல்கிறார்கள். உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படைத் தேவைகளை கூட வெகு எளிதாக தியாகம் செய்கிறார்கள். பேருந்து நிலையத்தில், பிச்சைக்காரர்கள், தொழுநோளிகளோடு எந்த விகல்ப்பமும் இல்லாமல் படுத்து உறங்குவதும் சாத்தியமாகிறது. Sempuzuthi Pathayil book Review
ஒரு வேளை உணவு தான் என்றால் அதனையும் மகிழ்ச்சியோடு ஏற்கிறுக் கொண்டு களப்பணி ஏற்றுகிறார்கள். ஒரு நாளில் எப்போது உணவு கிட்டும் என்ற நிச்சயமற்ற தன்மையிலும் தாக்குப் படித்து மக்களிடையே ஊழியம் செய்கிறார்கள். புரட்சி என்னும் மகத்தான நிகழ்வு. எல்லோருக்கும் எல்லாம் என்ற கனவு. இதனைச் சுமந்து கொண்டு எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். Sempuzuthi Pathayil book Review
எத்தனை எத்தனை தியாகங்கள்! எவ்வளவு தீவிரமான களப்பணி! இவ்வளவு அற்பணிப்பு மிக்க அந்த இளைஞரை, நூலாசிரியரை தொடர்ந்து முழு நேரப் பணியை செய்ய விடாமல் விலக்கி வைத்தது எது? முழு நேர புரட்சிகர பாதையிலிருந்து திருப்பியது எது?
முழுமையான புரிதல் இன்றி புரட்சிகர பாதையை தேர்வு செய்தது. ஓர் புரட்சிகர இயக்கத்தின் ஆணிவேர் மார்க்சியம் லெனினியம். இந்த கோட்பாட்டை, அதன் நடைமுறை ஆக்கத்தை, சமகால அரசியலோடு பொருத்திப் பார்த்து புரிந்து கொள்வதற்கு மார்க்சிய கல்வி மிக மிக அவசியம். Sempuzuthi Pathayil book Review
ஆனால் இதனை வாசிக்க நேரமின்றி, பழைய ‘மன ஓசை’ இதழ்களை பேருந்து நிலையங்களில் கூவி விற்பதும், தொடர் கலை நிகழ்ச்சிகளை மட்டும் நடத்திக் கொண்டே போவதையும் புரட்சிகர செயல் என ஏற்க மறுத்தல். அரசியல் விவாதங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் பள்ளி வகுப்பறை போல் மாறிய அரசியல் வகுப்புகள். தலைமை தோழர்கள் செய்வதில் தவறேதும் இருக்காது என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. நாளொன்றுக்கு ஒருவேளை உணவு. அதுவும் மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு உணவு.
1980களின் விலைவாசியில் ஒரு நாள் தினப்படி எட்டு ரூபாய். இரண்டு பரோட்டா. ஒரு டீ. காலையில் பொதுக் கழிப்பிட பயன்பாட்டுக்கு ஒரு ரூபாய். இப்படி வாழக் கற்றுக் கொண்டவர்கள் முழு நேர பணியை விட்டு வெளியேறுவது எதனால்? பிச்சைக்காரர்களோடு படுத்து உறங்க பக்குவப்படுத்திக் கொண்ட தியாக வாழ்வு. ஆனால், இந்த தியாக வாழ்வு என்னும் கற்பித்ததை நூலாசிரியர் வெ.ஜீவகிரிதன் ஒருமுறை முழுமையாக திரும்பி பார்க்கிறார். Sempuzuthi Pathayil book Review
தனக்கு இது தியாகம். ஆனால், எளிய மக்களுக்கு இது அன்றாட வாழ்வு. இந்தப் புரட்சிகர வாழ்வை மட்டும் கொண்டு, உழைக்கும் மக்களை எப்படி மீட்பது? புரட்சி என்பது ஏதோ ஒரு அரசியல் சாகசம் அல்ல. ரத்தமும் சதையுமான வாழ்க்கை. புரட்சியாளர்களுக்கு என்று ஒரு வாழ்வு முறை இருக்கிறது. புரட்சிகர பண்பாடு, கலாச்சாரம், கட்டுப்பாடுகள் இருக்கிறது. அப்படியான வாழ்க்கையை மேற்கொள்ள முடியுமா என்ற ஐயம் எழுகிறது.

தனது சட்டப் படிப்பை முடித்து கிடைக்கும் வாழ்வை இழக்க மனம் தடுமாறுகிறது. புரட்சிகர இயக்க ஊழியர்களின் ஒரு சிறு பலவீனம் கூட ஒரு புரட்சிகர கட்சியை, அதன் அமைப்பை, அதன் பணிகளை, கட்சியின் மீதான நம்பிக்கையை, சீர்குலைத்து விடும். புரட்சியை பின்னோக்கி இழுத்து விடும். எனவே முழு நேர ஊழியர் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொள்கிறார்.
மீதமிருந்த சட்ட கல்வியை முடித்து இன்று உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வாழ்க்கையை தொடர்கிறார் ஜீவகிரிதரன். புரட்சிகர வாழ்க்கை பயணத்தை தூண்டியது அவரது தாய் மாமனும் புகழ் பெற்ற மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான பி.வி பக்தவச்சலம். வீரஞ்செரிந்தவர். மனித உரிமைக்காக போராடியவர். இப்படியும் ஓர் மனிதரா! இப்படியெல்லாம் ஓர் வழக்கறிஞர் போராட முடியுமா! என பிரம்மிக்க வைக்கிறது அவரது வாழ்வும் போராட்டமும். Sempuzuthi Pathayil book Review
அதற்காவே நூலை அவசியம் வாசிக்க வேண்டும். அவரது செயல்பாடுகள் இளைஞர்களை எப்படி காந்தம் போல் ஈர்த்தன என்பதை அறிய வேண்டும். எத்தகைய தியாகங்களையெல்லாம் இளைஞர்கள் செய்ய, பி.வி. பக்தவச்சலம் வாழ்க்கை உதவுகிறது என்பதை நூலின் வழியாக அறிய முடியும்.
தனிநபர் அழித்தொழிப்பை விடுத்து, மக்களை அரசியல் படுத்தும் பாதைக்கு திரும்பிய பின்னரும் இன்று வரை, காவல் துறையின் பார்வை புரட்சிகர இயக்கங்கள் மீது மாறவேயில்லை. தேசிய அளவில் அமைக்கப்பட்ட உண்மையை கண்டறியும் குழுவையும் நூலாசிரியர் உட்பட அப்பாவி மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்து விடும் கொடூரம் குலை நடுங்கச் செய்கிறது. Sempuzuthi Pathayil book Review
ஜீவகிரிதரன் இரண்டு ஆண்டுகள் மூன்று விதமான இடங்களில் மூன்று விதமான உழைப்பாளி மக்களோடு முழுநேர பணியாற்றுகிறார். அவரது மூன்றுவிதமான அனுபவங்களும் நமக்கு பேரதிர்ச்சியை தருகிறது. அளவுக்கு மீறிய கொடிய வறுமை நிறைந்த மக்கள் மத்தியில் பணியாற்றுகிறார். அவர்களோடு வாழ்கிறார். உண்டு உறங்குகிறார்.

அவர் கடைசியாக பணியாற்றிய இடத்தில், நகர்புற கையால் மலமள்ளும் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்த அனுபவத்தை சொல்கிறார். எப்படி அதற்கு மதிப்புரை எழுதுவது என்றே தெரியவில்லை. அவர்களது ஒரு நாள் வாழ்க்கை நம்மை மனம் இடிந்து போக செய்யும். அதேசமயம், மனிதர்களுக்கு கொடுக்கும் அதே மரியாதையை பன்றிகளுக்கு கொடுக்கும் மனித நேயம். பிச்சை எடுப்பது போலான தங்களுடைய வாழ்க்கையில், எவ்வளவு அழகிய கூட்டு வாழ்க்கை! மனித மாண்பு! என கற்றுக்கொள்ள அதில் நிறைய இருக்கிறது.
ஜீவகிரிதரன் முழு நேர அரசியல் பணி செய்ய துணிந்த அந்த காலம், தலைமறைவு காலம். புனை பெயரில் வாழ தலைப்பட்ட காலம். புரட்சிகர கட்சி பணி செய்த காலம். அந்த தர்மத்தை இப்போதும் கடைபிடிக்க விளைகிறார்.
எனவே, இப்போதும் எந்த இடங்களில் பணி செய்தார் என்பதை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த ஊர்கள் இப்பொழுது எப்படி இருக்கும்? அந்த மக்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களது உணவு? வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ள மனம் துடிக்கிறது.
நூலாசிரியர் தான் ஓர் எழுத்தாளன் இல்லை என்று சத்தியம் செய்து கூறுவது போல் கூறுகிறார். ஆனால் உண்மையில் அவரது எழுத்து நடை, எடுத்தாளும் உவமைகள் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக அறிவிக்கிறது. தன்னிடம் மீதமுள்ள நினைவுகளை, சொல்ல முடியாத விசயங்களை புனைவு இலக்கியமாக சமூகத்திற்கு வழங்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:

நா. மணி – பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
நூல் வெளியீடு: பருதி பதிப்பகம்
விலை: ரூ.200/-.