கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்

Published On:

| By Selvam

Semiya Dal Path Recipe in Tamil Kitchen Keerthana

கலந்த சாதம் என்றால் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம் என்று அதையே செய்து கொண்டிருப்பது போரடிக்காதா? அவற்றுக்கு பதிலாக இந்த சேமியா துவரம்பருப்பு பாத் செய்து பாருங்கள். எளிதில் செய்யக்கூடிய உணவாகவும் சுவையானதாகவும் இருக்கும் இந்த  சேமியா துவரம்பருப்பு பாத்.

என்ன தேவை?

சேமியா – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – ஒன்று
கீறிய பச்சை மிளகாய் – 2
நசுக்கிய பூண்டு  – 4 பற்கள்
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். சேமியாவை என்ணெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நசுக்கிய பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேகவைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

கிச்சன் கீர்த்தனா: சேமியா கருப்பட்டி லட்டு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share