மழை காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதுபோன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் நாளை நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
