தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

Published On:

| By Kavi

new tamilnadu congress leader selvaperundhagai

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் 3 வருடப் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய தலைவரை நியமிப்பதற்கு காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் புதிய காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நிலையில், அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக எஸ். ராஜேஷ் குமாரை நியமிப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் எனவும் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?

GOAT: தளபதி விஜய்க்கு ‘வில்லன்’ இவர்தான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share