பிரியங்காவிடம் மாவட்ட தலைவர்கள் புகார்… செல்வப்பெருந்தகை சொல்வது என்ன?

Published On:

| By Selvam

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டியை சீரமைக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வேரறுக்கும் பணியை செய்யவில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார். Selvaperunthagai reacts congress district

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடன்கரை சந்தித்து மாநில தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். நேற்று (பிப்ரவரி 21) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகாரளித்தனர்.

இந்தநிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகையிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டியை சீரமைக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வேரறுக்கும் பணியை செய்யவில்லை. இந்த கேள்விகளுக்கு டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பதில் சொல்வார்கள். காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். டெல்லி தலைமை அதை சரிசெய்வார்கள்” என்றார்.

தொடர்ந்து, “திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று நீங்கள் பேசியதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே” என்ற கேள்விக்கு “திராவிடல் மாடல் ஆட்சி, காரல் மார்க்ஸ் ஆட்சி, பொதுவுடைமை ஆட்சி என்று ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை முழக்கங்கள் உள்ளது. அதேபோல, எங்களுடைய கொள்கை முழக்கம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி. அதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரத்தில் எங்கெங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ, அதுவும் காமராஜர் ஆட்சி தான். அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்” என்று தெரிவித்தார். Selvaperunthagai reacts congress district

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share