பிரதமர் வருகையால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை காட்டம்!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

கன்னியாகுமரியில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

நம் தமிழக மக்களும் இப்போது அதைத் தான் செய்யப்போகிறார்கள். திமுக, காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்படும். தமிழகத்தில் அவர்களின் வெற்றி என்ற தலைக்கனம் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு வரும்போது எல்லாம் தமிழ் மொழியின் மீது பாசத்தை பொழிகிறார் பிரதமர் மோடி. உங்களிடம் தமிழில் பேச போகிறேன் என்றார். தமிழ் மொழிக்கு மரியாதை வழங்க துடித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.12.31 கோடி மட்டுமே. ஆனால், 24,000 பேர் மட்டுமே கொண்ட சமஸ்கிருத மொழிக்கு அதே காலக்கட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூ.643.84 கோடி. 8 கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை 50 மடங்கு அதிகமாக உள்ளது.

இதுதான் மோடியின் தமிழ் பாசத்திற்கு அடையாளம். மோடியின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். மோடியின் தமிழக விரோத போக்கை முற்றிலும் அறிந்து வைத்திருக்கிற தமிழக மக்கள் இதற்கெல்லம் ஏமாற மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!

Kanguva: டீசர் ரிலீஸ் தேதி இதுதானா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share