செல்ஃபி எடுக்கும் தலைவர்கள்: AI கலைஞரின் மாயாஜாலம் !

Published On:

| By Jegadeesh

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜியோ ஜான் முள்ளூர் என்ற ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் கலைஞர், மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, அம்பேத்கர், அன்னை தெரசா, ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங், சேகுவேரா, ஆபிரகாம் லிங்கன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும் படங்களை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த புகைப்படங்களின் முழு தொகுப்பையும் இங்கே காணலாம்:

மகாத்மா காந்தி
நேதாஜி
நேரு
அம்பேத்கர்
அன்னை தெரேசா
ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்
சேகுவேரா
ஆபிரகாம் லிங்கன்
கார்ல் மார்க்ஸ்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அண்மையில் மாதவ் கோலி என்ற கலைஞர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆஸ்திரேலியா அதிரடி… தொடரை வெல்லுமா இந்தியா?

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share