மதத்தால் மக்களை பிளவுபடுத்த மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 12) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பழனியில் தமிழக அரசு நடத்திய அனைத்துல முருகன் பக்தர் மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தால், மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடத்துகிறார்கள்.
எங்களுடைய பணி என்பது மதம் சார்ந்து மக்களை பிரிப்பது அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவரவர் விரும்புகின்ற வகையில் அமைதியான வழியில் வழிபாடு செய்வதற்கு தடையாக இருக்க மாட்டோம். Sekar Babu says bjp trying to divide people
ஆனால், மதத்தால் இனத்தால் மொழியால் மக்களை பிளவுபடுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த சக்திகள் 2026 சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களது பாணியிலேயே சொல்லவேண்டுமென்றால், விரட்டியடிக்கப்படுவார்கள்.
தமிழகம் முழுவதும் 117 முருகன் கோவில்களில் குட முழுக்கு நடைபெற்றிருக்கிறது. ஆகவே, தமிழ் கடவுள் முருகன் முதல்வர் ஸ்டாலினை விரும்புகிறார். முருகன் கையில் உள்ள 2026 தேர்தலில் எங்களுக்கு நிச்சயமாக வெற்றியை பெற்றுத்தரும்” என்று தெரிவித்தார்.