எலெக்ஷன் ப்ளாஷ்: உதயநிதி சொன்னதை செய்யும் அண்ணாமலை

Published On:

| By Minnambalam Login1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் சென்னை மியூசிக் அகாடமியில் பிற மொழி சமூகத்தினரை சந்திக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன்பிறகு அசோகா ஓட்டலில் நடந்த பாஜக ஊடகப் பிரிவு ரங்கா மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சனாதனத்தை பின்பற்றுவதாகச் சொல்லும் அண்ணாமலை இறப்புச் சடங்கில் கலந்து கொண்டதற்குப் பின்னர் அதே நாளில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பாஜக தரப்பிற்குள்ளேயே சர்ச்சையானதாக மாறியுள்ளது.

சனாதன தர்மப்படி இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எப்படி சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முடியும், உதயநிதி சொன்னது போல் சனாதனத்தை ஒழிக்கப் பார்க்கிறாரா அண்ணாமலை என்று சனாதன ஆதரவாளர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share