ADVERTISEMENT

செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்.. நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Seeman's argument with a reporter causes a stir

கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கப் பாய்ந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் வெளியே வந்த பின் செய்தியாளருக்கு நாதக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் இன்று (நவம்பர் 23) நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அங்கன்வாடியில் வேலை செய்பவர்கள், சத்துணவில் வேலை செய்பவர்கள், கொசுமருந்து அடித்து ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்களை BLO வாக போட்டது யார்? திமுகதான? என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரம் அடைந்த சீமான், உனக்கு என்ன தம்பி பிரச்சனை.. ஏய் அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா.. தேர்தல் ஆணையம் சொல்லுற அரசு கேட்கணுமா.. உனக்கு என்ன பிரச்சனை.. தொடக்கத்தில் இருந்தே உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு.. காமெடி பண்ணிட்டு அலையாதீங்க.. நீதிமன்றத்தில் இதை எதிர்க்கிறேன் என்று வழக்கு போட்டயா என்றார்.

மேலும் உன்னை இன்றைக்கு அல்ல.. ரொம்ப நாளாக பார்க்கிறேன். பைத்தியம் ஆகிட்ட என்று நினைக்கிறேன். நீ மரியாதையாக கேள்வி கேளுடா.. டேய் நீ முதல்ல கேள்வி கேட்க கத்துக்கிட்டு வாடா..

ADVERTISEMENT

போடா.. ஏய் ஒரு மைக்கை தூக்கிட்டு, கேமராவையும் தூக்கிட்டு வந்தா பெரிய வெங்காயமாடா நீ.. போடா அந்தப்பக்கம் என்றார். அப்போது சீமான் ஆத்திரமாக எழுந்து செய்தியாளரை அடிக்கப்போவது போல் சென்றார். இதனால் செய்தியாளரும் சீமானும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து வெளிய வந்த செய்தியாளரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது‌இதனால் நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து திருமண மண்டபத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share