ஸ்டாலின் வெளிநாடு பயணம்… “துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி” – சீமான் டிமாண்ட்!

Published On:

| By Selvam

ஸ்டாலின் வெளிநாடு செல்லும் போது இடைக்கால முதல்வராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை நியமிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசும்போது, “துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் நகைச்சுவையாக தான் பேசினார். அவ்வளவு அமைச்சர்கள் இருக்கும் போது குறிப்பாக அவர் பெயரை மட்டும் குறிப்பிட்டதால், காயமடைந்திருக்கலாம். துரைமுருகன் ரஜினி குறித்து பேசியதையும் நகைச்சுவையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு பிரச்சனையே இல்லை.

அண்ணா காலத்தில் இருந்து துரைமுருகன் திமுகவில் இருக்கிறார். கடைசி வரை கலைஞருக்கு விசுவாசமாக இருந்தவர். ஸ்டாலின் வெளிநாடு செல்லும் போது அவரை இடைக்கால முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ நியமிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தவெக, நாதக கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்,  “அப்படி எந்த தகவலும் உறுதிசெய்யப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. 2025-ஆம் ஆண்டுக்கு பிறகு தான் கூட்டணி குறித்து தெரியவரும்.

என் நாட்டை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஒரு தனித்த கனவு இருக்கிறது. எங்களுடைய கொள்கைகளை, கோட்பாடுகளை ஏற்றுக்கொள்பவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம்.

யாருக்கும் விலை போகாமல் தனித்து போட்டியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யாருக்கு யார் அடிமை? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

ரஜினி தான் என் துரோணாச்சாரியார்… கன்னட நடிகர் உபேந்திரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share