ஆந்திரா எல்லையில் செம்மரக் காட்டில் ‘மரங்களுடன் பேசுவோம்’ மாநாடு நடத்தும் சீமான்

Published On:

| By Mathi

Seeman Trees Conference

மலைப் பகுதிகளில் மாடுகளின் மேய்ச்சல் உரிமையை வலியுறுத்தி ‘மாடுகளுக்கான’ மாநாடு நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் மலைகளில் மாடுகள் மேய்க்கும் போராட்டத்தை தேனி மலைப் பகுதியில் நடத்தினார் சீமான்.

இதனைத் தொடர்ந்து தற்போது மரங்களுடன் பேசுகிற மாநாட்டை நடத்த இருக்கிறார்.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக “மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!” என்ற தலைப்பில் வரும் 30-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் செம்மரங்கள் நிறைந்த காட்டில் இந்த மரங்களுடன் பேசுவோம் மாநாடு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இம்மாநாடு நடைபெறும் இடத்தை சீமான் இன்று பார்வையிட்டு மரங்களுடன் ‘பேசினார்’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share