“என் மீது காவி சாயம் பூச சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், எனக்கு காவி உடை செட் ஆகாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சென்னை மதுராந்தகத்தில் சீமான் தலைமையில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சீமான், “நானும் ரஜினிகாந்தும் பேசியது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். எங்களைச் சுற்றி பாதுகாப்புக்காக நின்றவர்களுக்கும், மிகவும் நெருக்கமான சிலருக்கும் தெரியும். ஆனால், என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒரு யூகத்தில் சிலர் பேசுகிறார்கள்.
ரஜினியுடன் என்ன பேசினேன் என யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. ரஜினியுடன் பேசியதால் நான் சங்கியாகிவிட்டேன் என்று சொன்னால், அவரை வைத்து படம் எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் நீங்கள் யார்?
உங்கள் வீட்டு காது குத்து, திருமணம், புத்தக வெளியீடு, பாடல் வெளியீடு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினி கலந்துகொள்கிறார். ஆனால், ஒரே ஒரு முறை தான் நான் அவரை சந்தித்தேன். இதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நாம் அரசியலின் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் இணைந்ததால், பயந்துவிட்டார்கள்.
ரஜினியை சந்தித்ததால், என் மீது காவி சாயம் பூசி சங்கியாக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் என்ன உடை போட்டாலும் எனக்கு நன்றாக இருக்கும். ஆனால், காவி நாட் ஃபிட் ஃபார் மி. இட்ஸ் வெரி பேட், வெரி அக்லி. ஐ ஹேட் இட்.
பாஜக என்னை பின்னால் இருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். பின்னர் ஏன் அவர்கள் என் கட்சி சின்னத்தை கைப்பற்றினார்கள்? எங்கள் கட்சியினர் மீது என்.ஐ.ஏ சோதனை நடத்துகிறார்கள்? ” என்று சீமான் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” – போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்: பள்ளிக்கல்வித்துறை நடத்தும் கட்டுரைப் போட்டி!