கைது நடவடிக்கைக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். Seeman says he will not be afraid of arrest
வளசரவாக்கம் போலீசாரின் சம்மனை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக தர்மபுரியில் இருந்து சென்னை வந்தடைந்தார் சீமான். தர்மபுரியில் இருந்து கார் மூலம் சேலம் வந்த சீமான் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், “விமானம் ஏறுவதற்கு முன்னர்தான் பேட்டி அளித்துவிட்டு வந்தேன், இந்த ஒரு மணி நேரத்தில் என்ன மாற போகிறது.
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இதை கையில் எடுப்பார்கள். அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக என்னை சமாளிக்க முடியாத ஒரு நெருக்கடி வரும் போது இதை இழுத்துக்கொண்டு வருவார்கள்.
இன்று நான் வருகிறேன் என்று சொன்னேன். அவர்கள் தான் இரவு 8 மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.
அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கைகளால் நல்ல அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படுகிறது. காத்திருந்து சம்மனை கொடுத்த அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் இதுமாதிரி அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை.
இங்கு சட்டப்படி என்ன நடக்கிறது. பள்ளி கல்லூரிகள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
15 ஆண்டுகளாக ஒரு பொம்பளையை வைத்து எங்களைதான் கற்பழித்து கொண்டிருக்கிறீர்கள். மொத்தமாக மனித உரிமை மீறல் நடந்துகொண்டிருக்கிறது. கைதுக்கெல்லாம் நான் பயப்படவில்லை.
நிறைய பேருக்கு உதவியது போலத்தான் இரண்டு மாதம் விஜயலட்சுமிக்கு பணம் கொடுத்து உதவினேன். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு உள்ளது” என்றார். Seeman says he will not be afraid of arrest