’இப்போ தடை… அடுத்து ரத்து தான்’ : உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான்

Published On:

| By christopher

seeman reaction to sc stay on hc

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 3) இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். seeman reaction to sc stay on hc

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், “வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. தொடர்ந்து, ‘விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்’ என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து மதுரையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் சீமான்.

ஆதாரமில்லாத அவதூறு வழக்குதான்! seeman reaction to sc stay on hc

அப்போது அவர், ”தற்போது நாம் தடை கேட்டிருந்தோம். அடுத்து இந்த வழக்கை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு நகர்வோம். இது ஆதாரமில்லாத அவதூறு வழக்குதான்.

நானே தான் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். இந்த வழக்கை எப்படி விசாரிச்சாலும், இது திட்டமிட்டு கூறப்பட்ட அவதூறு வழக்குதான் என்றுதான் முடியும்.

என்னை குறித்து திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர் அநாகரீகமாக உள்ளது. இது தான் பெரியார் கோட்பாடு. கற்பு என்ற ஒன்றே இல்லை என்கிறார் பெரியார். ஆனால் நான் கற்பழித்துவிட்டேன் என்று அவர்கள் தான் போஸ்டர் ஒட்டியுள்ளனர். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் போது என்னை பாலியல் குற்றவாளி என சொல்கிறார்கள் என்றால், என்மீது இழிப்பெயரை ஏற்படுத்த எவ்வளவு முயல்கிறார்கள் என்று தெரியும்.

கடந்த 15 ஆண்டுகளாக என்மீது சுமத்தப்பட்டு வரும் இந்த குற்றச்சாட்டுக்கு விரைவில் முடிவு எட்டப்படும்” என்று சீமான் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share