நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்காக சீமான் இன்று (பிப்ரவரி 27) நேரில் ஆஜராகாத நிலையில், அவர் வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டினர். seeman not appeared in police station
நடிகை விஜயலட்சுமி புகாரின் பேரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சமீபத்தில் இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தனர்.
4 வார கால அவகாசம் வேண்டும்! seeman not appeared in police station
ஆனால் கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே திட்டமிருந்த கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் இன்று பங்கேற்க இருப்பதால் அவர் ஆஜராக போவதில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜர் ஆவார்கள் என நமது மின்னம்பலம் தளத்தில் இன்று காலை குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி சீமான் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் அவர் நேரில் ஆஜராக 4 வார கால அவகாசம் கேட்டனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரியில் இருக்கும் சீமான், வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்லாதபடி போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சம்மன் கிழிப்பு! seeman not appeared in police station
மேலும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று வளசரவாக்கம் போலீசார் சம்மனை ஒட்டிச் சென்றனர். சீமான் நாளை ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்பட நேரிடும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த நாதக நிர்வாகி சுபாகர் என்பவர், சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தெறிந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.