நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 28) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். Seeman Valasaravakkam police station
சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 வாரங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இதனையடுத்து சேலத்தில் இருந்து இன்று மாலை சென்னை வந்த சீமான், இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற சீமான், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையம் நோக்கி புறப்பட்ட சீமான், தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழி வருகைக்காக காத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கயல்விழி வருகைக்காக காத்திருந்த சீமான் இரவு 9.38 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Seeman Valasaravakkam police station