சீமான் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

சீமான் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். Seeman case What happened

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்,  ”இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.  12 வாரங்களுக்குள் போலீசார் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த  மனு நீதிபதிகள் நாகரத்னா,  எஸ்.சி.சர்மா அமர்வில் இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது. 

சீமான் தரப்பு வாதம் Seeman case What happened

 Seeman case What happened

சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன்,  “புகார் அளித்த பெண் வழக்கை வாபஸ் பெற்ற போதும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011க்கு முந்தைய புகார் இது. இருவரும் உறவில் இருந்தனர் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண் விழித்து சீமானுக்கு எதிராக அரசியல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர்” என்று வாதிட்டார்.

அப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி நாகரத்னா,  “அந்த பெண்ணுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள்,  “இதுபற்றி எங்கள் க்ளையன்ட்டிடம் பேசிய பிறகே பரிசீலிக்க முடியும் ” என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள்,   “எதிர்மனுதாரரின் விளக்கம்  என்ன என்பதை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பப்படும்.  இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 

எதிர் மனுதாரரின் பதிலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த பிறகு காவல்துறை சீமானிடம் விசாரிக்க வேண்டும். அதுவரை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பாலியல் வழக்கே இல்லை Seeman case What happened

இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லியில் சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர் பேட்டியளிக்கையில்,

“இந்த வழக்கு 2011ல் பதிவு செய்யப்பட்டது. தான் கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி இரண்டு முறை திரும்ப பெற்றார். 2012ல் வாபஸ் வாங்கும் போது எழுத்துப்பூர்வமாகவே காவல் ஆய்வாளரும் எழுதி கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு 10 வருடமாக கிடப்பில் இருந்த இந்த வழக்கு திமுக வந்த பிறகு தூசி தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

2023ல் மீண்டும் விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அதில் 2011 இல் சொல்லாத  புகார்களை கூடுதலாக சேர்த்து சொல்லியிருந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் 164 ஸ்டேட்மென்ட்டையும் போலீசார் ரெக்கார்டு செய்தார்கள். அதன்பின் மீண்டும் அந்த வழக்கை விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார்.

இதற்கிடையே 2023 இல் சீமான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தான் சீமான் உச்ச நீதிமன்றம் சென்றார்.

குறை சொல்லத்தக்க உத்தரவு இருந்தால் உடனடியாக மேல்முறையீடு செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நம்பிக்கையோடுதான் மேல்முறையீடு செய்தோம்.

ஏற்கனவே 2024ல் பிரசாந்த் vs  நியூ டெல்லி என்சிடி என்ற வழக்கில், அதாவது சீமான் வழக்கில் உள்ளதுபோலவே சம்பவங்கள் கொண்ட மற்றொரு வழக்கில்,  ‘இரு தரப்பும் விருப்பப்பட்டு உறவு கொண்டால்  கற்பழிப்பின் கீழ் வராது. சட்டவிரோதம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நாங்கள் மேல்முறையீடு செய்த வழக்கு,  பிரசாந்த் vs  நியூ டெல்லி என்சிடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய  நீதிபதி நாகரத்னா அடங்கிய அமர்விலேயே இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மேற்குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை வாதங்களாக எடுத்து வைத்தோம். 

அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. போலீசார் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது.

இதை பாலியல் வழக்கு என்று சொல்வதே தவறு” என்றார்.

 Seeman case What happened

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சீமானிடம், இரு தரப்பும் உடன்பாடு காண 12 வாரம் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருக்கிறது.  இதற்கான வழிகள் இருக்கிறதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர்,  “உடன்பாடு என்றால் என்ன? எனக்கு புரியவில்லையே? என கேள்வி எழுப்பினார்.

இருதரப்பும் செட்டில்மண்ட் செய்து கொள்வது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறதே என்ற கேள்விக்கு,  “அதற்கு வாய்ப்பு இல்லை; தேவையும் இல்லை” என பதிலளித்தார் சீமான்.

Seeman case What happened

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share