நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சீமானிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். Seeman case pressure to vijayalakshmi
இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளன.
ஒரு பக்கம் சீமான் தரப்பில் இருந்தும், இன்னொரு பக்கம் சீமான் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் விஜயலட்சுமிக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மீது கடந்த 2011 இல் நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டு இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் விஜயலட்சுமி. ஆனால் சில மாதங்களிலேயே அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
இதன் பின் சீமானை பற்றி பெங்களூருவில் இருந்துகொண்டே அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சை, பரபரப்பு கிளப்பிக் கொண்டே இருந்தார் விஜயலட்சுமி.
இப்படியாக பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ‘சீமானால் நான் ஏழுமுறை கருக்கலைப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது சீமான் தரப்பினர் என்னை மிரட்டுகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருந்தார். Seeman case pressure to vijayalakshmi
இந்த புகாரின் பேரில் விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பவித்ரா முன்னிலையில் ஆஜரான விஜயலட்சுமி, 164 ஸ்டேட்மென்ட் அதாவது வாக்குமூலமும் நீதிபதியிடம் கொடுத்தார். சீமானுக்கும் தனக்குமான உறவுக்கு ஆதாரங்களாக போட்டோக்கள், வீடியோக்கள், போன் உரையாடல்கள் ஆகியவற்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி.
திடீரென அதன் பின் மீண்டும் புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி, ‘எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. இனிமேல் சென்னை பக்கம் வர மாட்டேன்’ என்று சொல்லி வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில்தான்… தன் மேல் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டதால், அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சென்றார் சீமான்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘விஜயலட்சுமியே வாபஸ் வாங்கினாலும் வழக்கை ரத்து செய்ய முடியாது. 3 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் சீமான். உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ‘12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இவ்விவகாரத்தில் செட்டில்மென்ட் முயற்சிகள் நடைபெற்றதா? நடைபெறுகிறதா?’ என்று கேட்டார். சீமான் தரப்பில் அதுகுறித்து ஆலோசித்து சொல்வதாக கூறினர்.
இந்நிலையில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மேலும் தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோர் பதிளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீமானுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ‘இப்போது இடைக் காலத் தடை கிடைத்திருக்கிறது. விரைவில் ரத்தாகும்’ என்று தெம்பாக கூறினார் சீமான்.
அதேநேரம் சீமானோ, ‘செட்டில்மென்ட்’ என்ற பேச்சே இல்லை என்று மறுத்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் சீமான் சார்பில் அவரது உறவினர் லூயிஸ், விஜயலட்சுமியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அக்கா என்று விஜயலட்சுமியை அழைத்து அவர் பேசிய ஆடியோ சமூக தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.

அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் உடைந்து போன குரலோடு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. Seeman case pressure to vijayalakshmi
இந்த அசிங்கத்துல இனிமே போராட முடியாது. எனக்காக உச்ச நீதிமன்றத்துல குரல் கொடுக்க யாருமே இல்லையே’ என்ற விரக்தி அவரது குரலில் தெரிந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு போலீஸாரும், விஜயலட்சுமியும் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். போலீஸார் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர். அதாவது தங்களது முதற்கட்ட விசாரணையில் சீமானுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் பதில் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மனம் உடைந்துபோயிருக்கும் விஜயலட்சுமியை தமிழ்நாட்டிலிருந்து சீமான் எதிர்ப்பாளர்கள் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் பேசி வருகிறார்கள்.
’நீங்க இப்போதுதான் தைரியமாக இருக்கணும். உச்ச நீதிமன்றம் கொடுத்த ஸ்டேவை உடைக்க தமிழ்நாடு அரசும் உறுதியாக இருக்கிறது. அடுத்த விசாரணையின்போது உங்களுக்காக திறமையான வழக்கறிஞரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீங்க தயங்காதீங்க. இத்தனை வருஷம் போராடிட்டு, இப்ப மனம் மாறிடாதீங்க, உங்களை பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்திய சீமானுக்கு பயந்து போய் பின்வாங்கலாமா? உங்களோட கண்ணீருக்கும் கஷ்டத்துக்கும் நல்ல தீர்வு கெடைக்கும்” என விஜயலட்சுமியிடம் தைரியம் கொடுத்து பேசியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் விஜயலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பில் வழக்கை நடத்த முன்வருவார் என்று சீமான் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்,
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஸ்டேவை உடைத்து, விசாரணையை மீண்டும் தொடர தமிழக அரசுத் தரப்பும் திறமையான வழக்கறிஞர்களை அமர்த்தவும் ஆலோசனை செய்து வருகிறது. Seeman case pressure to vijayalakshmi
