நாகை, திருச்சி உள்பட 6 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

Published On:

| By christopher

Seeman announced candidates for 6 constituencies

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  இன்று (பிப்ரவரி 25) அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக கூறியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 20 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி திருச்சியில் ராஜேஷ், தஞ்சாவூரில் ஹுமாயுன் கபீர், நாகப்பட்டினத்தில் கார்த்திகா, மயிலாடுதுறையில் காளியம்மாள், பெரம்பலூரில் தேன்மொழி மற்றும் சீமானின் சொந்த தொகுதியான சிவகங்கையில் எழிலரசி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எந்தவித வேறுபாடும் இன்றி அறிவிக்கப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டு, ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றவும் கட்சித் தொண்டர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை : நீதிமன்றம் சென்ற 5 வயது சிறுவன்!

வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை: ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share