ADVERTISEMENT

“பொருளாதாரத்தில் முதலிடமாம் ஊதியம் கேட்டால் நிதி இல்லையாம்” : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

Published On:

| By Kavi

“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

டிபிஐ அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார், அருகில் இருந்த மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் (டிசம்பர் 27) போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் டிபிஐ அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிந்தனர்.

ADVERTISEMENT
https://twitter.com/KALAMATHIV29419/status/2004818079508038120

ஆனால், அங்கு ஆசிரியர்கள் செல்லவில்லை. டிபிஐ முன்பு போராட்டத்தில் ஈடுபட்டால் போலீசார் கைது செய்வார்கள் என கருதிய ஆசிரியர்கள், தங்களது திட்டத்தை மாற்றி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நாங்கள் என்ன கேட்கிறோம்… திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தானே கேட்கிறோம்… வஞ்சிக்காதே வஞ்சிக்காதே இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்காதே… எங்கள் உழைப்பை சுரண்டாதே… பணிக்கு ஏற்ற ஊதியம் எங்கள் உரிமை…

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் முதலிடமாம் ஊதியம் கேட்டால் நிதி இல்லையாம்…” என்று இடைநிலை ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.

அதுபோன்று செய்வது ஆசிரியர் பணி… கொடுப்பது துப்புரவு ஊதியமா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்தசூழலில் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்துக்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share