கரூரில் கொங்கு மெஸ் உணவகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று(மே27) சீல் வைத்தனர்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று(மே27) சோதனை மேற்க்கொண்டனர்.
இந்த சோதனை இன்றும் தொடர்ந்த நிலையில் நேற்று கரூரில் திமுகவினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் இன்று வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
இதனிடையே, கடந்த 2 நாட்களாக கரூர் கொங்கு மெஸ்சில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மெஸ் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினரால் துப்பாக்கி ஏந்திய மத்திய அரசின் ரிசர்வ் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், 2 வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற சோதனைக்கு பின் கரூரில் கொங்கு மெஸ் உணவகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று(மே27) சீல் வைத்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உதயநிதி வாங்கிய பணம்: கணக்கை முடக்கிய பின்னணி -அமலாக்கத் துறை ஆக்சன்!
