சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மர்ப நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் இன்று (ஜூலை 20) அதிகாலை உயிரிழந்தார்.
தாம்பரம் – கடற்கரை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண் நேற்று (ஜூலை 19) பயணம் செய்துள்ளார்.
அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது அதே ரயிலில் பயணம் செய்து வந்த மற்றொரு நபர் ரயிலில் இருந்து இறங்கி ராஜேஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
பின்னர் அதே ரயிலில் ஏறி தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன் விரோதம் காரணமாக ராஜேஸ்வரியை மர்ம நபர் அரிவாளால் வெட்டியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நின்று கிளம்புவதற்குள் பெண்ணை வெட்டிவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறிசென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரிவாளால் வெட்டப்பட்ட பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று (ஜூலை 20) அதிகாலை உயிரிழந்தார்.
மோனிஷா