ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு – மாணவர்களே ஸ்கூல் போக ரெடியா?

Published On:

| By indhu

Schools open on June 6 - Are students ready to go to school?

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி, 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று (மே 24) தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

ADVERTISEMENT

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல், 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன.

தொடர்ந்து 1,2 மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன.  அனைத்து மாணவ – மாணவிகளும் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுத்தப்படுகின்றனர்.

ADVERTISEMENT

Schools open on June 6 - Are students ready to go to school?

அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது” என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கரின் குண்டர் சட்ட வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு?

பாஜக நாம் தமிழரை விட அதிக வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்து விடுகிறேன் – சீமான் சவால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share