பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாஸ் தொடர்பாக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. School Students Free Bus Pass
வரும் ஜூன் 2ஆம் தேதி புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது. மாணவ மாணவிகள் புதிய வகுப்புக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பஸ் பாஸ் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து கழகம் மே 30 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. School Students Free Bus Pass
அதில், “வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும். அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும். 2025-26 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. School Students Free Bus Pass
இந்த கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை பள்ளி மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கும், அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ / மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் பள்ளி துவங்கும் / முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக எற்றி இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.