மாணவி தாலி வழக்கு: விசாரணை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம்!

Published On:

| By Prakash

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் தாலி கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து அந்த மாணவியை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவினர் அரசு காப்பகத்தில் அடைத்தனர். அதேபோல அந்த மாணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட மாணவியை மீட்க, மாணவியின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாணவியும் மாணவனும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மாணவனை கைது செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்த வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்து புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை வழங்கினர்.

ADVERTISEMENT

மேலும், மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு!

ஜேஇஇ நுழைவுத் தேர்வு: விண்ணப்பக் கட்டணம் உயர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share