மாணவியின் கழுத்தை அறுத்த மாணவர்… அடுத்த அதிர்ச்சி – நடந்தது என்ன?

Published On:

| By christopher

school student attempt murder karur

பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை, அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. school student attempt murder karur

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த மாணவி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு அந்த மாணவரை சந்திப்பதற்காக பாதிக்கப்பட்ட மாணவி சென்ற நிலையில், சிறிது நேரத்தில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, மயங்கி கீழே விழுந்த நிலையில், உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், அந்த மாணவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடைய நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மாணவி தற்போது மயக்க நிலையில் உள்ளார். அவர் மீண்டு வந்தால் மட்டுமே இந்த சம்பவம் எதனால் அரங்கேறியது என்பது முழுமையாக தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்! school student attempt murder karur

மேலும் இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “சில செய்தி தொலைக்காட்சிகளில் 24.02.2025 ஆம் தேதி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதற்கு மறுப்பு அறிக்கை தெரிவித்தல் தொடர்பாக”

23.02.2025 ஆம் தேதி இரவு கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த போது மாணவியின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இது குறித்து விசாரணையில் மேற்படி மாணவி அந்த மாணவனைப்பற்றி இழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share