புது வகுப்புகள்… பள்ளி திரும்பும் மாணவர்கள்!

Published On:

| By Kavi

கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. School reopen today

தமிழக பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தேர்வுகள் நடந்தன. மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 7 முதல் 17 வரையிலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24 வரையிலும் தேர்வு நடைபெற்றது.

ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்கியது.

இந்த நிலையில் 37 நாள் விடுமுறை கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று ( ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதையொட்டி நேற்று வரை பள்ளிகளை சுத்தம் செய்தல், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.

பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளில் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

இந்நிலையில், 32 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு திரும்புகின்றனர்.

இன்றே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், அரசு பள்ளிகளில் புத்தக பைகள் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

அதுபோன்று அனைத்து பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு உரிய காலை அட்டவணையை தயார் செய்து கொடுத்து பள்ளி திறக்கும் முதல் நாளில் இருந்தே செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. School reopen today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share