கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. கன மழை எதிரொலியாக ஒவ்வொரு நாளும் பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறைகளையும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் கன மழையால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மழை பாதிப்பு காரணமாகச் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 15) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
மீரா மிதுனை பிடிக்க முடியவில்லை: லுக் அவுட் டுக்கு போலீஸ் தயார்!