சம்பளம் பிடித்தம் செய்யப்படும் : இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை!

Published On:

| By Kavi

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 26 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் நடந்து வருகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், போராட்டங்களில் பங்கேற்று பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பு எடுத்தவர்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Equal work Equal Pay என பதாகைகளை ஏந்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் No work No Pay என்று அரசு கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share