தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். school education department announced
இந்தநிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை இன்று (மே 6) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி, கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“மார்ச் – 2025-ல் நடைபெற்ற 2024 – 2025-ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மே 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார்.
மாணவர்கள் results.digilocker.gov.in, https://tnresults.nic.in/ என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து
கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. school education department announced
