ADVERTISEMENT

வெளுக்கும் கன மழை.. உருவாகும் 2-வது புயல் சின்னம்- எந்த 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?

Published On:

| By Mathi

Rain leave

தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்குவதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 24-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து ‘சென்யார்’ புயலாக உருவாகக் கூடும்.

ADVERTISEMENT

அதேபோல குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் குமரிக்கடல்- தென்மேற்கு வங்க கடலில் புயல் சின்னமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது.

ADVERTISEMENT

கனமழை பெய்கிற, கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  • கோவை
  • திண்டுக்கல்
  • காஞ்சிபுரம்
  • கள்ளக்குறிச்சி
  • நாமக்கல்
  • திருவள்ளூர்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • வேலூர்
  • விழுப்புரம்
  • கன்னியாகுமரி
  • நெல்லை
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • ராமநாதபுரம்
  • புதுக்கோட்டை
  • தேனி
  • திருச்சி
  • பெரம்பலூர்
  • அரியலூர்
  • கரூர்
  • கடலூர்
  • மதுரை

இதனையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்

ADVERTISEMENT
  1. கன்னியாகுமரி
  2. தூத்துக்குடி
  3. திருநெல்வேலி
  4. தென்காசி
  5. விருதுநகர்
  6. ராமநாதபுரம்
  7. புதுக்கோட்டை
  8. திருச்சி
  9. அரியலூர்
  10. சிவகங்கை
  11. தஞ்சாவூர்
  12. மயிலாடுதுறை
  13. நாகை
  14. கரூர்
  15. கள்ளக்குறிச்சி
  16. மதுரை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும்

  1. கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  2. சேலத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share