10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்- இன்று மாலை தொடக்கம்

Published On:

| By Mathi

Laptops Tamil Nadu

கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் (Lap Tops லேப் டாப்) வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனவரி 5-ந் தேதி மாலை தொடங்கி வைக்கிறார்.

மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

தற்போது இந்த திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.

முதல் கட்டமாக இன்று 10 லட்சம் மாணவர்களுக்கு லேட்பாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

இந்த லேட்பாப்களில்

Intel i3 / AMD Ryzen 3 Processor
8 GB RAM
256 GB SSD
Windows 11 Home Strategic BOSS Linux OS ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இந்த லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share