ADVERTISEMENT

SIR-க்கு எதிரான வைகோ வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Published On:

| By Mathi

SIR Vaiko Case

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் தவெக சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கேரளா அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று SIR-க்கு எதிரான வைகோவின் மனுவை விசாரித்தது. அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இதனை விசாரிக்க வேண்டும் என வைகோ தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும், SIR-ல் தமிழ்நாடு- கேரளா என ஒவ்வொரு மாநிலமும் சந்திக்கின்ற பிரச்சனைகள் வெவ்வேறானவை என்றுதான் நாங்கள் பார்க்கிறோம் என்றனர் நீதிபதிகள்.

ADVERTISEMENT

இதனையடுத்து வைகோவின் மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share