பதஞ்சலி வழக்கு: பாபா ராம்தேவ்வை நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

பதஞ்சலி நிறுவன வழக்கு தொடர்பாக அதன் நிறுவனர் பாபா ராம்தேவ்வை நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ்வின் நிறுவன மருந்துப் பொருட்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,

“விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நீதிமன்றம் இத்தகைய மீறல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு பொருளின் விளம்பரத்தின்மீதும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் பதிலளிக்க வேண்டும்” என எச்சரித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு பாபா ராம்தேவ் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதற்கிடையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முதல் நாள் தான் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பதையும் வழக்கு தொடர்ந்தவர் தரப்பு சுட்டிக்காட்டியது.

இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், “பாபா ராம்தேவின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன…

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்” என மீண்டும் எச்சரித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்:  கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுமா சாதம் வடித்த கஞ்சி?

ஹெல்த் டிப்ஸ்: ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

CWC 5: நிகழ்ச்சியில் களமிறங்கும் ‘வேற லெவல்’ போட்டியாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share