தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள்- உச்சநீதிமன்றம் அதிரடி ‘டிஸ்மிஸ்’- ஏன்?

By Mathi

|

Published on 28 May 2026, 11:34 AM

Supreme Court Reservation

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு (69% Reservation) எதிரான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 69% இடஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன பாதுகாப்பும் உள்ளது.

ADVERTISEMENT

அதேநேரத்தில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டும் வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் காயத்ரி என்பவர், “69% இடஒதுக்கீடு அமலில் இருப்பதால் தம்மால் மருத்துவ படிப்பு படிக்க முடியவில்லை” என கூறி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல 69% இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இம்மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர் சிவ பாலமுருகன், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி ஆஜராகி வாதாடினர்.

ADVERTISEMENT

அப்போது, “மனுத் தாக்கல் செய்த மாணவர்கள் மருத்துவ படிப்பையே முடித்துவிட்ட நிலையில் இந்த மனுக்களுக்கான முகாந்திரமே இல்லையே என்றும் இவை தன்னல மனுக்களே தவிர பொதுநலன் மனுக்கள் இல்லை என்று கூறி டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel