அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உச்சநீதிமன்றம் விதித்த 3 முக்கிய உத்தரவு!

Published On:

| By christopher

SC deliver orders in Priest from of all castes

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். SC deliver orders in Priest from of all castes

ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு அரசாணையை கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அந்த வகையில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி மூலமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை எந்த ஒரு பணி நியமனமும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, முறையாக பயிற்சி பெற்ற எங்களை தகுதியின் அடிப்படையிலும், இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வுகள் மற்றும் அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கும் விதமாக இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களது தரப்பின் இந்த புதிய இடையீட்டு மனுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஏற்கெனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என கோரப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் குமணன், “தமிழ்நாட்டில் குறைந்த அளவில் தான் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஸ்ரீரங்கம் போன்ற ஆகம விதிக்குட்பட்ட கோயில்களை தவிர்த்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ”ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்ளாக தமிழத்தில் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் மற்றும் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்கள் எத்தனை என்று தமிழக அரசு அடையாளம் காண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராமேஸ்வரம் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் ஆகிய பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share