கேசவ விநாயகத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!

Published On:

| By christopher

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கேசவ விநாயகத்தை சிபிசிஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது,  தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

அதனை எதிர்த்து கேசவ விநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் நீதிமன்ற அனுமதி பெற்றே சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ரூ.4 கோடி வழக்கில் சம்மந்தப்பட்ட ஹார்ட்டிஸ்க் காணாமல் போயுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரிக்க முடியுமா?” என தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், கேசவ விநாயகத்தை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை இருமடங்காக உயர்வு: ஸ்டாலின் உத்தரவு!

அமெரிக்கா சென்று என்ன பயிற்சி எடுத்தார் அஸ்வின்? – சதம் விளாசிய பின்னணி இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share