தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
சாத்தூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சாத்தூர் தொகுதியை எடுத்துகிட்டா ஸ்டார் தொகுதி.. ஏன்னா நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை இங்கே களம் காண்கிறார்.
போன 2021-ல் திமுக கூட்டணியில் மதிமுகவின் ரகுமான்கான் இங்கே வெற்றி பெற்றிருந்தார்.
நெல்லையில் சிறுபான்மையினர் கணிசமான வாக்குகள் அதிகமாக இருக்கிற நிலையில அது தனக்கு நெகட்டிவாகிடுமோன்னு இப்ப இந்துக்கள் வாக்குகள் அதிகமாக இருக்கும் சாத்தூருக்கு மாறி இருக்கிறாரு நயினார் நாகேந்திரன்.
திமுக வேட்பாளராக இங்கே கடற்கரை ராஜ் களம் காண்கிறார். இந்த தொகுதியில அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் 5 முறை வெற்றி பெற்றிருந்தார்.
இப்ப திமுக வேட்பாளராக போட்டியிடும் கடற் கரைராஜ் 2011-ல் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் ஆர்பி உதயகுமார் வெற்றி பெற்றிருந்தார்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 39%
அதிமுக கூட்டணி – 36%
தவெக- 18%
நாதக- 6% வாக்குகள் பெறும்
திமுக 3 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. நயினார் நாகேந்திரன் கடுமையாக போராட வேண்டியதுள்ளது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









