ஸ்டாலின் குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் கைது!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று (ஜூலை 11) கைது செய்யப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் யூடியூப், எக்ஸ் போன்ற வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். இவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார், தென்காசி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சி அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

முன்னதாக கலைஞர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், கடந்த 2021-ஆம் ஆண்டு தஞ்சாவூர் போலீசாரால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

அதேபோல, 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நடந்த நாம் தமிழர் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், மீண்டும் அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட விவகாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிபிஐக்கு எதிராக மேற்கு வங்காளம் தொடுத்த வழக்கு ஏற்கத்தக்கது!!

சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க எடப்பாடிக்கு அழுத்தமா? – ஜெயக்குமார் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share