நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘ மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ‘ வெப் சீரிஸ் டிரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் வெப் சீரிஸ் ‘ மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ‘. நிர்மல் குமார் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘ சலீம் ‘ படத்தை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சீதா, ரேகா, லிவிங்ஸ்டன், ரக்ஷன், ஆஜித், வர்ஷா போலம்மா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வெப் சீரிஸை ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் தாமிரா இயக்கவிருந்தார்.
அவர் மறைவிற்கு பிறகு இயக்குநர் நிர்மல் இதை கையில் எடுத்துள்ளார். மனைவியிடம் சிறந்த கணவராக இருக்க முயல்வதில் இருக்கும் உறவு முறை சிக்கல்கள் போன்ற விஷயத்தை காமெடி கலந்து உணர்ச்சி மிக்கப் பேசும் வெப் சீரிஸாக இது இருக்குமெனத் தெரிகிறது. 10 எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீடுகளின் முன்பு ‘நோ-பார்க்கிங்’ போர்டுகள்: மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்: பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்!