காட்டுத்தீ: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை!

Published On:

| By christopher

Sathuragiri Devotees are banned due to forest fire

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு காட்டுத்தீ காரணமாக  பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சாப்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுமார் 12,000-க்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு உள்ள வனப்பகுதி ஒன்பது பீட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்தாவது பீட்டில் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று இரவு வரை காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பாதுகாப்பு கருதி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) ஆடி பவுர்ணமியை முன்னிட்டு வரும் சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களுக்கும் இந்தத் தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share