விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காரசேவு ஏக பிரபலம். சாத்தூர் வழியாக பயணிப்பவர்களில் பெரும்பாலானோர், காரசேவு வாங்காமல் வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சாத்தூர் சேவு பலகாரத்தை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
(2 கிலோ சேவு தயாரிக்க)
கடலை மாவு – ஒன்றரை கிலோ
அரிசி மாவு – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 25 கிராம்
பூண்டு, பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
சீரகம் – 20 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பூண்டு, பெருங்காயத்தை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். ஒன்றரை லிட்டர் தண்ணீரில் மிளகாய்ப்பொடி, உப்பு கலந்து இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு போட்டுப் பிசைந்து… பூண்டு-பெருங்காய விழுதைச் சேர்த்துப் பிசையவும். பிறகு, சீரகத்தைச் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்தில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி… சேவு கரண்டி அல்லது கண் கரண்டியை (ஜாரணி) வாணலி மீது பிடித்துக்கொண்டு, மாவை கரண்டி மீது வைத்து அழுத்தித் தேய்க்கவும். கரண்டியின் துளைகள் வழியாக, மாவு கம்பி கம்பியாக எண்ணெயில் இறங்கும். நன்றாக வேகவிட்டு, எடுத்தால் சுவையான சேவு ரெடி!
