இனி டோல்கேட்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை : நிதின் கட்கரியின் சூப்பர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

சாட்டிலைட் முறையில் டோல் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். satellite based toll fee nitin gadgari

தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றைக் கடக்கும் போது டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் பாஸ்டேக் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இருந்தும் முக்கிய சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் நிற்பதை காண முடிகிறது.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அடுத்த இரண்டு வாரங்களில் சாட்டிலைட் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் இனி வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட் அடிப்படையில் கட்டணங்கள் தானாகவே வசூலிக்கப்படும்.

அதாவது ஆன்-போர்டு யூனிட் (OBU) அல்லது கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள்  செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்பட்ட வங்கி டிஜிட்டல் வாலட்டில் இருந்து டோல் கட்டணம் நேரடியாகக் கழிக்கப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். satellite based toll fee nitin gadgari

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share